Thulabaaram | A.V.M.Rajan,Muthuraman,Nagesh,Saratha,Kanchana | Evergreen Hit Movie | 4K HD Movie

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

Added by Tamilcinema
4 Views
துலாபாரம் ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அ. வின்சென்ட் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன், சாரதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். இப்படம் இதே பெயரில் மலையாளத்தில் வெளிவந்த திரைப்படத்தின் மறு ஆக்கம் ஆகும். இசை ஜி. தேவராஜன்

படத்தின் கதையானது நீதிமன்றத்தில் துவங்குகிறது. நீதிமன்றத்தில் மூன்று குழந்தைகளை கொலை செய்த தாயான குற்றவாளி கதாநாயகி விஜயாவுக்கு (சாரதா) அதிகபட்ச தண்டனையை அளிக்குமாறு அரசுதரப்பு வழக்கறிஞரும் விஜயாவின் தோழியுமான வத்சலா (காஞ்சனா) கூறுகிறார். குற்றம் சாற்றப்பட்டவரும் தனக்கு தூக்கு தண்டனையை அளிக்குமாறு கூறுகிறார்.
அதிலிருந்து கதை பின்னோக்கி நகர்கிறது. நாயகி விஜயா ஒரு பணக்கார வீட்டுப் பெண்ணாவார். கல்லூரியில் பயிலும்போது உடன் பயின்ற மாணவன் பாபு (முத்துராமன்) மீது விஜயா ஒரு தலை காதல் செய்கிறாள்.
இந்நிலையில் இவளது தந்தை சத்யமூர்த்தி (மேஜர் சுந்தரராஜன்) அவருக்கு சொந்தமான பூர்வீக வீடு பல ஆண்டுகளாக நீதிமன்ற வழக்கில் இருந்து வந்ததாள் அந்த வழக்கை சரிவர வழக்கறிஞரின் சம்பந்தம் (டி. எஸ். பாலையா) அவர்களின் அறிவிப்பு இல்லாததால் நீதிமன்ற தீர்ப்பு எதிர்கட்சி பிரதிவாதி ஆன அந்த ஊரின் செல்வேந்தர் ஆன பாலசுந்தரம் (வி. எஸ். ராகவன்) அவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு அமைந்து விடுகிறது. இதனால் சத்யமூர்த்தி சொத்துக்களை இழந்த துக்கம் தாங்காமல் இறந்துவிடுகிறார்.
மேலும் விஜயாவின் ஒரு தலை காதலன் பாபுவும் நான் உன்னை சக தொழியாகவும் தங்கையாகவும் நினைத்தேன் என்று கூற விஜயா யாரும் இல்லாத கைவிடபட்ட நிலையில் இருக்கும் போது தனது தந்தை ஆதரித்து வளர்த்து வந்த ஏழை தொழிலாளி ராமு (ஏ. வி. எம். ராஜன்) இவளுக்கு ஆதரவாக இருந்து மணந்துகொண்டு எளிய வாழ்வை மேற்கொள்கிறாள்.
ராமு ஒரு ஆலைத் தொழிலாளியாகவும் தொழிற்சங்கத் தலைவனாகவும் இருக்கிறார். இந்த இணையருக்கு குழந்தைகள் பிறக்கின்றனர்.
தொழிற்சாலை வேலை நிறுத்தத்தினால் வறுமை மிக்க வாழ்வை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தொழிற்சாலை உரிமையாளரான பாலசுந்தரத்திடம் ராமு எதிர்த்து சம்பள உயர்வு கேட்க உடனே பாலசுந்தரத்தின் கோபம் அதிகமானதால் பல அடியாட்கள் ஏவி ராமுவைக் கொன்றுவிடுகின்றனர்.
நிற்கதியாக விஜயா தன் குழந்தைகளுடன் தவிக்கிறாள். பசியுடனும், வறுமையுடனும், போராடும் விஜயா இறுதியில் தன் குழந்தைகளைக்கு சாப்பாட்டில் விஷம் கலந்து கொன்று விட்டு தானும் தற்கொலை முயற்சியில் ஈடுபடும் போது கைது செய்யப்படுகிறார்.
Category
Entertainment
Tags
A.V.M.Rajan, Muthuraman, Nagesh

Post your comment

Comments

Be the first to comment